Powered By Blogger

Thursday 25 April 2013

நா ன்  த னி யா ர்  நி று வனம்  ஒன் றில்  பணி யா ற் றி  வரு கி றே ன். என் னுடன்  பணி புரியும் தோழியி டம்  உள் ள  ந ல் ல  பழ க்கம் ஒ ன் று .அ வ ள்  புதி தா க  புடவை  எடுத்தால் , தனது பழைய  புடவை  ஒன்றை தன் வீட்டில்  பணிபுரியும் பெண்ணிடமோ அல்லது  ஒரு ஏழை பெண்ணிடமோ  கொடுத்து  விடுவாள் . புடவை  மட்டுமல்ல  தன்  கணவனுக்கோ  அல்லது  தன் குழந்தைக்கோ  புதிய உடை எடுத்தாலும்  அவர்களது பழைய   உடையில்  ஒன்றை ஏழைகளுக்கு  கொடுத்து  விடுவாள் .                                                                                                                                                             இது குறித்து அவளிடம்  நான்  பேசிக்கொண்டிருந்த போது ''நான் மிகவும் வறுமையான சூழ்நிலையில்  படித்து  முன்னே றியவ ள்.சீருடை  தைக்ககூட  எங்கள் வீட்டில்  வசதி இல்லை. வருஷா வருஷம் என் வகுப்பு ஆசிரியர் தான் தைத்து கொடுப்பார். தவிர  தன் மகளுக்கு புது உடை எடுக்கும் போதெல்லாம்  தனது மகளின் உடையிலிருந்து ஒன்றை எனக்கு கொடுத்து விடுவார். நான்  அப்போதெல்லாம்  கடவுளிடம் வேண்டிக்கொள்வேன் ,அந்த ஆசிரியர்  தன் மகளுக்கு இன்னும் நிறைய சட்டை எடுத்து தரணும்  என்று.                                                                                                                             அந்த ஆசிரியரிடமிருந்து ஏற்பட்ட  பழக்கம் இது.அடுத்தவர்களுக்கு நாம் உதவி பண்ணும்போது அவர்களது  வாழ்த்துக்கள் நம்மை  நல்லா வச்சுக்கும்ன்னு  நம்பறேன்"                                                                                                   அப்புறம் என்ன எங்கள்  வீட்டில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தாத உடைகளை  ஏழைகளுக்கு கொடுத்து  அவர்களை மகிழ்வித்தோம்.                                                                                                                                                                இது ஒரு மாத இதழில் நான்  படித்து  நெகிழ்ந்தது.                                                                                                                                                                

Wednesday 24 April 2013

ந ந்த வனத் தி ற் குள்   ம று ப டி யும்  பிர வேசிக் கிறே ன் 

Sunday 6 March 2011

             பெண்ணின் பெருமை
பெண்ணால் பிறந்தேன்;பெண்ணாய் பிறந்தேன்;பெண்ணை பெற்றேன்;பெருமை படுகிறேன்
     உலக   மகளிர் அனைவருக்கும்                                                                                                       மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!!

Saturday 5 March 2011

மங்கையர் மலரில் நான் படித்து ரசித்த கவிதை ஒன்று
                  தேர்ச்சி
கணிதத்தோடு போராடுகையில் வருகிறது ஒரு குரல்
"ஒரு குடம் தண்ணி பிடிச்சு உள்ளே வையேன்"
அறிவியலோடு உரையாடுகையில்.......
"அடுப்படியில் கூட நிக்காம எப்படி நீ குப்பை கொட்ட போற?"
வரலாற்றைப் புரட்டும்போது புரட்டியெடுக்கிறது "மாதாந்திர வலி!"
இருப்பினும் ஒவ்வொரு வருடமும்,தலைப்பு செய்தியில் தவறாமல்" இந்த வருடமும் மாணவிகளின் தேர்ச்சி சதம் அதிகம்!"

Saturday 26 February 2011

இன்று என் தோழி ஒருவரின் மகனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றேன்.அறிவியல் வளர்ச்சியால் ஸ்டெம் செல் பயன்படுத்தி அவனுக்கு
அறுவைசிகிச்சை செய்திருந்தார்கள்.அறிவியல் முன்னேற்றத்தை  கண்டு வியந்தேன்.அறிவியல் வளர்ச்சியால் இறப்பு விகிதம் குறைந்து இருந்தாலும் நோய்கள் அதிகரித்து இருப்பது மனதுக்கு கவலை அளித்தது

Saturday 19 February 2011

என் நந்தவனம்  உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது