Powered By Blogger

Saturday 5 March 2011

மங்கையர் மலரில் நான் படித்து ரசித்த கவிதை ஒன்று
                  தேர்ச்சி
கணிதத்தோடு போராடுகையில் வருகிறது ஒரு குரல்
"ஒரு குடம் தண்ணி பிடிச்சு உள்ளே வையேன்"
அறிவியலோடு உரையாடுகையில்.......
"அடுப்படியில் கூட நிக்காம எப்படி நீ குப்பை கொட்ட போற?"
வரலாற்றைப் புரட்டும்போது புரட்டியெடுக்கிறது "மாதாந்திர வலி!"
இருப்பினும் ஒவ்வொரு வருடமும்,தலைப்பு செய்தியில் தவறாமல்" இந்த வருடமும் மாணவிகளின் தேர்ச்சி சதம் அதிகம்!"

3 comments:

  1. கிருஷ்ணப்ரியா வலைப்பூ வழி உங்கள் நந்தவனத்தினுள் நுழைந்தேன் ... வேர் பற்றிய சிறு செடிகள் பூத்துக் குலுங்கட்டும் நற்பராமரிப்பில்...!
    படைப்பை ருசிக்கும் வாசகருக்கு படைப்பாளியை அறிய ஒரு வாய்ப்பளிக்க விழைகிறேன். இக்கவிதை எழுதிய நெய்வேலி பாரதிக்குமாரைப் பற்றி கிருஷ்ணப்ரியாவிடம் கேட்கலாம் அல்லது www.bharathikumar.blogspot.com சென்றும் அறிமுகப் படுத்திக் கொள்ளலாம் அவரது எழுத்தை!

    ReplyDelete
  2. நந்தவனம் வலைப்பூவுக்கு என் வாழ்த்துகள் ... தினமும் மணி கணக்கில் பிரயாணித்து , அங்கும் இடைவிடாது பணிகள் செய்துவிட்டு எஞ்சிய நேரத்தை வீட்டு பணிகள் ஆக்ரமிக்க ... ஒரு வலைப்பூவை பராமரிப்பது அத்தனை சுலபமில்லை முயற்ச்சிக்கு என் வாழ்த்துகள் . மங்கையர் மலரில் வெளியான என் கவிதையை வாசித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கவிதையை உங்கள் வலைப்பூவில் எனக்கு பிடித்த கவிதை என்று இடுகையிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி பாரதிகுமார்
    தங்கள் படைப்புகள் சிலவற்றை படித்தேன்.நேரம் கிடைக்கும்போது அனைத்தையும் படிக்க முயற்சிக்கிறேன்.தங்களுடைய அனுபவத்தின் முன் நான் மிகவும் சிறியவள்.ஊக்கமளித்தமைக்கு நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    ReplyDelete